கற்பித்தலை மேம்படுத்த நீங்கள் உருவாக்கிய முறைகளையும் மின்னஞ்சலில் இங்கே பகிருங்கள்..ஆசிரியர் சமுதாயத்திற்கு உதவுங்கள்..மின்னஞ்சல்- pumsskpvn@gmail.com

Monday, May 12, 2014

மிகப் பெரிய எண்ணையும் எளிய வழியில் வகுத்தல்


 
கணித அடிப்படைச் செயல்களான கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,மற்றும் வகுத்தல் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே தவறின்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு கணித ஆசிரியரின் கடமை.குறிப்பாக வகுத்தலை புரிந்து கொள்வதற்கு மாணவர்கள் பெரிதும் சிரமப் படுகிறார்கள்.வகுத்தல் என்பது சமமாகப் பிரித்தல் என்று பொருள் படும்.எவ்வளவு பெரிய வகுத்தலையும் எவ்வாறு தவறின்றி எளிமையாக செய்ய முடியும் என்று இந்த வீடியோவில் விளக்கப் பட்டுள்ளது.
இதற்கு ஒன்றாம் பெருக்கலிலிருந்து ஒன்பதாம் பெருக்கல் வாய்ப்பாடு வரை தெரிந்திருந்தால் போதுமானது.

Saturday, May 10, 2014

தமிழனாய் பிறந்தோம்.... தமிழை வளர்க்காவிடினும் பேசவாவது செய்வோம்.பாரதிதாசன் - மெய் சொல்லல் நல்லது


பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)

பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

நான்காம் வகுப்பு ஆங்கிலம் Little Tuppen பாடத்தின் புதிய சொற்களுக்கான Powerpoint பொருள் விளக்கம்

Wednesday, May 7, 2014

ஆய கலைகள் அறுபத்து நான்கு அறிந்துகொள்வோம்


1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);

அமிலங்கள் மற்றும் காரங்களின் pH மதிப்பு


தமிழ் எண்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

 
மிக எளிதாக மனதில் இருத்த :
டலை ருண்டையை க்கி ப்பி ருசிச்சு சாப்பிடுமாறு ங்க க்கா கூறினாள்

நூறுக்கு அருகிலுள்ள இரு எண்களை விரைவாகப் பெருக்குதல்


ஆறுகளும் பாயும் மாவட்டங்களும்

 

நன்றி: சின்னப்பராஜ்

தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையைக் கற்பித்தல்


உறவுகளை அறிந்துகொள்வோம்